vernac-language-icon
Language
banner-image
mobileimage
MPL பயன்பாட்டை இப்போது பதிவிறக்க குறியீட்டை ஸ்கேன் செய்யவும்!
MPL பயன்பாட்டை இப்போது பதிவிறக்க குறியீட்டை ஸ்கேன் செய்யவும்!

ஆன்லைனில் ஸ்னேக் அண்ட் லேடரை (பரமபதம்) விளையாடுங்க

ஸ்னேக் அண்ட் லேடர் பற்றி

ஸ்னேக் அண்ட் லேடர் (பரமபதம்) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிளேயர்ஸ் விளையாடும் ஒரு வேடிக்கையான போர்டு விளையாட்டாகும். இது பல ஆண்டுகளாக சர்வதேச அளவில் விளையாடப்பட்டு கிளாசிக் விளையாட்டாக மாறியுள்ளது. ஸ்னேக் அண்ட் லேடர் போர்டில் சிறிய சிறிய சதுர கட்டங்கள் இருக்கும். கணிசமான எண்ணிக்கையிலான ஏணிகளும் பாம்புகளும் விளையாட்டு போர்டில் இருக்கும். பாம்புகளும் ஏணிகளும், கட்டங்களை இணைக்கின்றன. டைஸ் எவ்வாறு ரோல் ஆகிறது என்பதைப் பொறுத்து ஒருவரின் ஆட்டக்காய் எவ்வாறு நகர்கிறது என்பதை கண்காணிப்பதே பிரதானக் குறிக்கோள். ஒவ்வொரு ஆட்டக்காயும் கீழ் சதுரத்தில்(1) இருந்து தொடங்கி மேலே உள்ள சதுரத்திற்கு செல்ல வேண்டும். அதாவது பெரிய எண்ணான(100) சென்றடைய வேண்டும். வழியில், ஆட்டக்காய் ஏணிகளை சந்திக்கலாம், ஏணிகள் மேல்நோக்கிச் செல்ல உதவும், அதே நேரத்தில் பாம்பின் பிடியில் சிக்கினால், நீங்கள் கீழே நழுவி விடுவீர்கள். 

இந்த விளையாட்டு எளிமையானது மற்றும் பெரியவர்கள், குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. ஸ்னேக் அண்ட் லேடர் போர்டு விளையாட்டு, சுட்ஸ் அண்ட் லேடர், பைபிள் அப்ஸ் அண்ட் டவுன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விளையாட்டு ஒழுக்க நெறிகளில் வேரூன்றியுள்ளது, இதில் ஒரு பிளேயர், போர்டில் ஏறும்போது, நற்பண்புகளால் (ஏணிகள்) வாழ்க்கையில் முன்னேறுவதையும் மற்றும் இறங்கும் போது தீய பண்புகளால் (பாம்புகள்) பின்னடைவு கொள்வதாகவும் கருதப்படுகிறது. மேலும், இது இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

வேடிக்கையான, பொழுதுபோக்கு விளையாட்டான ஸ்னேக் அண்ட் லேடரை உங்கள் ஃப்ரெண்ட்ஸுடன் விளையாடுங்க. மேலும் ஒரு விஷயம் என்னவென்றால், MPL மூலம், நீங்கள் இப்போது இந்த போர்டு விளையாட்டை ஆன்லைனில் விளையாடலாம்! உங்கள் திறமையின் அடிப்படையில் நீங்கள் ஒரு எதிரியுடன் போட்டியிடுவீர்கள், மேலும் ஒரு நேர லிமிட் இருக்கும். அதற்குள் நீங்கள் அதிகபட்ச புள்ளிகளைப் பெற வேண்டும். கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது, இல்லையா?

உபகரணங்கள்

இந்த விளையாட்டில், போர்டு அளவு மாறுபடலாம், ஆனால் மிகவும் பொதுவான அளவு 8×8,10×10 அல்லது 12×12 சதுரங்கள் கொண்டவை ஆகும். போர்டுகள் குறிப்பிட்ட சதுரங்களில் தொடங்கி குறிப்பிட்ட சதுரத்தில் முடிவடைகின்றன. இதில் ஏணிகளும் உள்ளன. நீங்கள் மேலே முன்னேறிச் செல்லும்போது ஒரு பாம்பில் சிக்கி கட்டத்திலிருந்து கீழே இறங்க நேரிட்டால், இறுதி சதுரத்தை அடைவதற்கான உங்கள் நேரம் அதிகரிக்கிறது. பிளேயர்ஸ் வெவ்வேறு தனித்துவமான விளையாட்டுகளைப் பெறுகிறார்கள். அவற்றைக் கொண்டு அவர்கள் விளையாட்டை விளையாடுகிறார்கள். விளையாட்டில் அவர்கள் எவ்வாறு நகர வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒரு டைஸை ரோல் செய்கிறார்கள். சில நேரங்களில், விளையாட்டை சீக்கிரம் முடிப்பதற்கு இரண்டு டைஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

விளையாட்டு

● வழக்கமான ஸ்னேக் அண்ட் லேடர் போர்டு விளையாட்டில், பிளேயர் தொடக்க சதுரத்தில் டோக்கனுடன் தொடங்குகிறார். கட்டம் பொதுவாக "1" இல் இருந்து தொடங்குகிறது. மேலும் பிளேயர்ஸ் ஒரே சைஸை ரோல் செய்தவன் மூலம் வெவ்வேறு சதுரங்களில் மாறி மாறி செல்கிறார்கள். டைஸ் காட்டும் எண்ணுக்கு ஏற்ப டோக்கனை நகர்த்துவதன் மூலம் பிளேயர்ஸ் வெவ்வேறு இடங்களுக்கு டோக்கனை நகர்த்துகிறார்கள்.

● பிளேயர்ஸ் போர்டில் குறிக்கப்பட்ட ஒரு நிலையான பாதையை தொடக்கம் முதல் மேலே முடியும் வரை பின்பற்ற வேண்டும். விளையாட்டில் ஒரு டர்ன் வரும்போது, ஒரு டோக்கன் ஒரு ஏணியின் கீழ் பகுதியில் இருந்தால் சல்லென்று மேலே ஏறி அதன் உச்சிக்கு செல்லும். இதன் பொருள் பிளேயர் வெறுமனே நிறைய எண்களைத் தாண்டி விளையாட்டில் முன்னேறுகிறார் என்பதாகும்.

● ஒரு பிளேயர் பாம்பின் பிடியில் சிக்கி இறங்கினால், டோக்கன் பாம்பின் குறைந்த எண் கொண்ட சதுரத்திற்கு பல படிகள் கீழே நழுவி வந்துவிடும்.

● ஒரு டைஸ் 6 என ரோலான பிறகு, பிளேயர் 6 சதுரங்கள் நகர்ந்து கூடுதல் டர்னைப் பெறுகிறார். இல்லையெனில், ஆட்டம் அடுத்த பிளேயரிடம் செல்கிறது. கடைசி சதுரத்திற்குத் தங்கள் டோக்கனை கொண்டு வரும் முதல் பிளேயர் வெற்றியாளராகிறார்.

ஸ்னேக் அண்ட் லேடரில் நினைவில் கொள்ள வேண்டிய விதிகள்

● விளையாட்டில் ஒரு துரதிர்ஷ்டவசமான நகர்வு என்னவென்றால், டோக்கன் பாம்பிடம் சிக்கும்போது அது எண்ணில் சரசரவென கீழே இறங்குகிறது. அதாவது, டோக்கன் சீராக கீழே நகர்ந்து பாம்பின் வால் முடிவடையும் எண்ணில் வந்து நிற்கும்.

● டோக்கன் ஏணியின் அடித்தளத்தில் வந்துவிடும்போது ஒரு அதிர்ஷ்டமான விஷயம் நிகழும். அது என்னவென்றால் பிளேயர் உடனடியாக மேலே முன்னேறி செல்வார்.

● இருப்பினும், பிளேயர் பாம்பின் அடிப்பகுதியிலோ அல்லது ஏணியின் மேல் சதுர்த்தி லோ இருந்தால் அந்த இடம் மாறாமல் இருக்கும். பிளேயர் பாதிக்கப்படாமல் தொடர்ந்து டைஸை ரோல் செய்வார். அவர்கள் ஒருபோதும் ஏணியில் இருந்து கீழிறங்க முடியாது என்று விளையாட்டு விதிகள் குறிப்பிடுகின்றன.

● இரண்டு டோக்கன்கள் யாரையும் ஓவர்லேப் செய்யாமல் ஒரே நேரத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே சதுரத்தில் இருக்க முடியும். அவர்களின் அடுத்த டர்ன் வர சைஸை ரோல் செய்யப்படும் வரை பிளேயர்ஸ் அதே எண்ணில் இருக்க முடியும்.

● நீங்கள் எண் 100 ஐ நெருங்கும்போது, பிளேயர் தேவையான சரியான எண்ணை ரோல் செய்ய வேண்டும். இல்லையெனில், அவர்கள் அடுத்த டர்ன் வரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். இந்தப் பகுதியில்தான் அதிர்ஷ்டம் வருகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பிளேயர்  96 ஐ அடைகிறார். அந்த நேரத்தில் சைஸை ரோல் செய்யும்போது 5 என்ற எண் வந்தால் அவர்களால் டோக்கனை நகர்த்த முடியாது. 4 என்ற எண் கிடைத்தால் மட்டுமே நகர்த்த முடியும். அவர்கள் 99 என்ற எண்ணை அடைந்தால், அவர்கள் டைஸில் ஒன்றைப் பெறும் வரை காத்திருக்க வேண்டும்.

MPL இல் ஸ்னேக் அண்ட் லேடர் போர்டு விளையாட்டை எவ்வாறு விளையாடுவது?

● ஒரு பிசிக்கல் போர்டில் இந்த விளையாட்டை விளையாட வேண்டும் என்றால், உங்களுக்கு இரண்டு முதல் நான்கு பிளேயர்ஸ், ஒரு கேம் போர்டு, ரோல் செய்வதற்கு ஒரு டைஸ், ஒரு பிளேயருக்கு ஒரு கேம் பீஸ் (டோக்கன்) ஆகியவை தேவைப்படும். விளையாட்டைத் தொடங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு பிளேயரும் டைஸை ரோல் செய்கிறார்கள். அதிக எண்ணை பெறும் பிளேயர் விளையாட்டைத்  தொடங்குகிறார்.

● ஆன்லைனில் ஸ்னேக் அண்ட் லேடர் விளையாட உங்களுக்கு MPL செயலி மற்றும் நிலையான இன்டர்நெட் கனெக்ஷன் மட்டுமே தேவை. ஒவ்வொரு பிளேயருக்கும் மூன்று டோக்கன்கள் கிடைக்கும், எதிரி விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு முன்பு மூன்று டோக்கன்களையும் கடைசி சதுர கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

● ஒரு விளையாட்டு பீஸ் பாம்பின் (பாம்புத் தலை) உச்சியில் சிக்கி இறங்கினால், அது அதன் வாலில் உள்ள பாம்பின் அடிப்பகுதி சதுரத்திற்கு நகர்கிறது.

● பீஸ் ஏணியில் கீழ் பகுதியில் இருக்கும் வகையில் டைஸில் எண் விழுந்தால் நேராக ஏணியின் உச்சத்திற்கு பிளேயர் ஏறிச் செல்ல முடியும்.

● ஒரு பீஸ், ஒரு ஏணியின் மேல் சதுரத்தில் அல்லது பாம்பின் வாலில் உள்ள சதுரத்தில் இருக்குமாறு எண் விழுந்தால், டோக்கன் அதே இடத்தில் அல்லது அதே எண்ணில் தான் வைக்கப்படும். பிளேயர்ஸ் ஒருபோதும் ஏணியின் மூலம் இறங்கவோ அல்லது பாம்பின் மேல் ஏறவோ முடியாது. அப்படியான நேரத்தில், பிளேயர் ஒரு டர்னை தவறவிட்டு அடுத்த டர்ன் வரை காத்திருக்கலாம்.

● பாரம்பரிய விதிகளின்படி, ஒரு டோக்கன் எதிரியின் டோக்கனின் அதே எண்ணுக்குச் செல்ல நேரிட்டால், யாரும் வெளியேற்றப்படுவதில்லை, மேலும் இரண்டு டோக்கன்களும் அதே கட்டத்தில் வைக்கப்படுகின்றன. இருப்பினும், ஆன்லைன் ஸ்னேக் அண்ட் லேடரில், உங்கள் டோக்கன் எதிரியின் டோக்கன் இருக்கும் அதே இடத்திற்கு வந்தால், எதிரியின் டோக்கன் நாக்டு அவுட் செய்யப்பட்டு மீண்டும் விளையாட்டைத் தொடங்க வேண்டும்.

● இந்த விளையாட்டில் வெல்ல, பிளேயர்ஸ் 100வது சதுரத்திற்குச் செல்ல சரியான எண்ணிக்கைக்கு டைஸை ரோல் செய்ய வேண்டும். சரியான எண்ணிக்கையை ரோல் செய்யத் தவறினால் பிளேயர்ஸ் அடுத்த டர்னில் மீண்டும் சரியான எண் பெற ரோல் செய்ய வேண்டும்.

ஸ்னேக் அண்ட் லேடரில் வின்னிங்

ஒரு பிளேயர் தங்கள் அனைத்து டோக்கன்களையும் போர்டின் இறுதி சதுரத்திற்கு (எண் 100) வேறு எந்த எதிரிக்கும் முன் கொண்டு செல்லும்போது, ஸ்னேக் அண்ட் லேடர் விளையாட்டு முடிவடைகிறது. ஒவ்வொரு பிளேயரும் கொடுக்கப்பட்ட நகர்வுகளின் எண்ணிக்கையை முடித்தவுடனும் விளையாட்டு முடிவடையலாம். விளையாட்டு முடிந்ததும், அதிக ஸ்கோர் எடுத்த வீரர் வெற்றியாளர் ஆகிறார்.

வேரியேஷன்ஸ்

ஸ்னேக் அண்ட் லேடர் விளையாட்டில் வேரியேஷன்ஸ் என்னவென்றால், பிளேயர் இறுதி சதுரத்தை அடைய சரியான எண்ணை ரோல் செய்ய வேண்டும். டைஸில் விழும் எண்ணிக்கை பெரியதாக இருந்தால், டோக்கன் அதே இடத்தில் இருக்கும் அல்லது இறுதி சதுரத்திலிருந்து விலகி மீண்டும் திரும்பும். எடுத்துக்காட்டாக, ஒரு பிளேயருக்கு முதல் டர்னில் 3 தேவைப்பட்டு ஆனால் ரோல் செய்யும்போது 5 என்ற எண் வந்தால், டோக்கன் 3 படிகள் முன்னோக்கி பின்னர் 2 இடங்கள் பின்னோக்கி வந்துவிடும். மற்றொரு எடுத்துக்காட்டு என்னவென்றால், பிளேயர் டைஸை உருட்டும்போது 5 கிடைத்து வெற்றிக்கு 1 தேவைப்பட்டால், அவர்கள் நான்கு இடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

மற்றொரு விளையாட்டு வெர்ஷன் ஆடர்ஸ் அண்டு லேடர்ஸ் ஆகும், இதில் டைஸ் இல்லை மற்றும் குறைந்தது ஐந்து அதே மாதிரி டோக்கன்கள் இருக்கும். அனைத்து பிளேயர்களும் அந்த டோக்கன்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த மாதிரி ஃபைவ்-பை-ஃபைவ் போர்டில் ஐந்து டோக்கன்களுடன் விளையாடலாம். டைஸ் இல்லை; அதற்கு பதிலாக, பிளேயர் ஒரு குறிப்பிட்ட டோக்கனைத் தேர்ந்தெடுத்து அதை ஒன்று முதல் நான்கு இடங்களுக்கு இடையில் நகர்த்துகிறார். கடைசி டோக்கனை கடைசி எண்ணுக்கு நகர்த்தும் முதல் பிளேயர் வெற்றி பெறுகிறார்.

அமெரிக்காவில் பரவலாக விளையாடப்படும் மிகவும் பிரபலமான வெர்ஷன் மில்டன் பிராட்லி 1943-இல் உருவாக்கிய சுட்ஸ் அண்ட் லேடர்ஸ் ஆகும். பாம்புகளுக்குப் பதிலாக, ஒரு பிளேகிரவுண்ட் அதன் இடத்தைப் பிடித்தது. விளையாட்டு 10x10 போர்டில் உள்ளது, மற்றும் பிளேயர்ஸ் தங்கள் பீசஸை அதாவது ஒரு ஸ்பின்னரான டைஸுக்கு மாற்றாக முன்னோக்கி நகர்த்துகிறார்கள். இந்த போர்டு விளையாட்டின் கருப்பொருள், பிளேகிரவுண்டில் குழந்தைகள் ஏணிகளில் ஏறி சுட்களில் இறங்குவதைக் காட்டுவதாகும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஸ்னேக் அண்ட் லேடரின் நோக்கம் என்ன?

ஸ்னேக் அண்ட் லேடர் விளையாட்டு எவ்வளவு காலமாக விளையாடப்படுகிறது?

ஸ்னேக் அண்ட் லேடர் குழந்தைகளுக்கு என்ன கற்பிக்கின்றன?

ஸ்னேக் அண்ட் லேடரில் நீங்கள் எத்தனை டைஸை ரோல் செய்கிறீர்கள்?

Disclaimer

This game may be habit-forming or financially risky. Play Responsibly.

Galactus Funware is the owner of, and reserves all rights to the assets, content, services, information, and products and graphics in the website except any third party content.

Galactus Funware refuses to acknowledge or represent about the accuracy or completeness or reliability or adequacy of the website's third party content. These content, materials, information, services, and products in this website, including text, graphics, and links, are provided "AS IS" and without warranties of any kind, whether expressed or implied.

*MPL is the biggest gaming app in India based on the number of unity games, special tournaments and formats. MPL is available only to people above 18 years of age. MPL is available in all states where permissible by extant law. Consequently, users located in some states may not be able to access our App or its contests. For an updated list of such states, please download the App